நானும் புரட்டிப்பார்த்தேன்
நாட்களோடு நம் நினைவுகளை ...
நாம் நட்புடன் கைகோர்த்து
கடந்துவிட்டது சில பல வருடங்கள் ...
காலை காதிரவனுமில்லை,
இருள் மதியுமில்லை ...
தெளிவான வானில் தென்படும்
நிலையான நட்சத்திரம் ...
காலம் கடந்தும்
இன்று முளைத்த விதையாக ...
இன்று துளிர்த்த செடியாக ...
இன்று மலர்ந்த மலராக ...
பாசமெனும் பசுமையுடன்
நெஞ்சில் எப்போதும் ...
நமக்குள் பொறாமை போட்டியாம்?
ஆம்! யோசித்துப்பார் ...
பொறாமையான விஷயத்தைக்கூட
பொழுதுப்போக்காக எடுத்துக்கொள்ள
போட்டி போட்டோமே அது தான்! ...
நம் வாழ்க்கை போராட்டத்தில்
இமை அளவும் நகைக்க இயலாமல்
துன்பத்தில் தவித்த போது,
மகிழ்ச்சியை நம் விழி சேர்த்தது
நம் நட்பு தானே ...
உன்னில் நான்
என்னில் நீ
பரிமாறிக்கொள்கிறார்கள் காதலில் ...
உன்னில் நானில்லை
என்னில் நீ இல்லை
உன்னை பிரியும் கணம்
என்வசம் நானில்லை
இயல்பான நட்பின் மழலை இம்சை ...
உணர்ச்சி வசப்பட்டு பழகுவதால் தான்
காலம் கழிய காதல் கசக்கிறது ...
உணர்வுக்கு மதிப்பு அளிப்பதால் தான்
காலம் கடந்தாலும் நட்பு இனிக்கிறது ...
வெட்கமும் வேதனையும்
காதலோடு கலந்திருக்கலாம்
நட்புடன் கலந்துவிட்டால்
விளையாட்டும் வேடிக்கையும் தான்
இவைகளுக்கு வெளிச்சம் ...
நான் எனும் ஆணவத்தில்
நான் நடமாடிக்கொண்டிருக்க,
என்னில் நட்புடன் கைகோர்த்து
நாம் எனும் சமூகத்தை உருவாக்கினாய் ...
நட்பு ஒரு சுகமான வலி தான்
சுமக்கும் போது தெரியாத வலி
சுமை இறக்கும் போது வலிக்கிறது ...
வாழ்க்கை என்பது முடிவோடு தொடரும்
தொடக்கமுள்ள வட்டமாம் ...
அதில் நட்பு என்பது மையமாக
நம் நெஞ்சில் மையம் கொண்டு
மெய்யை மெய்யாக்குகிறது ...
என்றும் நட்புடன்...
ரெ. ஆனந்த்
ஸ்ரீநிவாசன்
No comments:
Post a Comment